உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என மின்னஞ்சல் மூலமாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சண்டிகர் நகரில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.அந்த மின்னஞ்சலில், கூறப்படும் குண்டுவெடிப்புகளுக்கான குறிப்பிட்ட நேரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதன்படி, ஏப்ரல் 06 ஆம் திகதி இன்று பிற்பகல் 1:11 மணிக்கு பாடசாலைகளும், பிற்பகல் 2:11 மணிக்கு மேயர் அலுவலகமும், பிற்பகல் 3:11 மணிக்கு தலைமைச் செயலகமும் குறிவைக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், அதே இரவில் இரவு 9:11 மணிக்கு சண்டிகர் பல்கலைக்கழகத்தின் காந்தி பவனில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதுவரை எந்தவொரு தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்று சண்டிகர் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத இந்த மின்னஞ்சல் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி அன்று டெல்லி மேயர் ராஜா இக்பால் சிங் அலுவலகத்திற்கு வந்த இதேபோன்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0