உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நிலவை நெருங்கும் ஆர்டெமிஸ் 2 விண்கலம்.

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
54 பார்வைகள்

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் லட்சிய திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது.

பல கட்ட சோதனைகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தை நாசா வெற்றிகரமாக செயல்படுத்தியது. கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றிவந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர்.


பின்னர், ‘டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்’ என்ற என்ஜின் எரிப்பு மூலம் நிலவை நோக்கிச் செலுத்தப்பட்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர். இந்த ஒட்டுமொத்ததிட்டத்தின் மதிப்பு ரூ.8.64 லட்சம் கோடி ஆகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் 2028 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின்நிலவுத் தரையிறக்கத்துக்கு (ஆர்டெமிஸ் 4) ஒரு முன்னோட்டமாக அமையும்.

ஆர்டெமிஸ் 2 எனும் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன், கடந்த 2 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்டது.இன்று காலை நிலவரப்படி நிலவின் வட்டப்பாதையை ஆர்டெமிஸ் நெருங்கியுள்ளது. இன்று இரவு நிலவின் மறுபக்கத்திற்கு ஓரியன் விண்கலம் செல்ல உள்ளது.

நிலவை நெருங்கி செல்லும் நேரத்தில் விண்வெளி வீரர்கள் நிலவின் தரைப்பகுதியில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0