உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

தெஹ்ரான் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாதெஹ்ரானிடம் அனுமதி பெற்ற பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக ஈரானிய ஊடகங்கள் ஏப்ரல் 5 ஆம் திகதி நேற்றையதினம் செய்தி வெளியிட்டன.

தெஹ்ரான் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாகக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இப்பகுதி எச்சரிக்கை நிலையில் உள்ளது.

இந்தத் தாக்குதலில் அப்போதைய ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பதிலுக்கு ஈரான், இஸ்ரேலையும், ஜோர்தான்ன், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும், அது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0