உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு; மற்றுமொரு நபர் கைது!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
66 பார்வைகள்

கடந்த வாரம் வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாக நான்காவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள லண்டன் நீதிமன்றத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை நேற்றைய தினம் நிகழ்ந்ததாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

தாக்குதலைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் நேற்றுக் காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

20 வயதான ஹம்சா இக்பால் மற்றும் 19 வயதான ரேஹான் கான் என்ற இரண்டு பிரிட்டிஷ் ஆண்களும், பிரிட்டிஷ்-பாகிஸ்தான் இரட்டைக் குடியுரிமை பெற்ற 17 வயது சிறுவன் ஒருவனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

சொத்துக்களைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0