உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
54 பார்வைகள்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தானின், சியால்கோட்டில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,

இந்த முறை இந்தியா ஏதேனும் போலித் தாக்குதல் நடத்த முயன்றால், எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நாங்கள் தாக்குதலை கொல்கத்தாவிற்கு எடுத்துச் செல்வோம்.

இந்தியா தனது சொந்த உளவாளிகளையோ அல்லது பாகிஸ்தானிய கைதிகளையோ பயன்படுத்தி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி, அதன் பழியை இஸ்லாமாபாத்தின் மீது சுமத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

எனினும், இந்தக் கூற்றை நிரூபிப்பதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், முன்பைப் போலவே இந்த அச்சுறுத்தல்களும் எந்தவித ஆதாரமும் இன்றிய போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியர தரப்பினர் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி அன்று நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகமாகவே உள்ளது.

அந்தத் தாக்குதலில், பயங்கரவாதிகளால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம், மே 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இரு அண்டைய நாடுளுக்கு இடையே ஒரு குறுகிய, தீவிரமான இராணுவ மோதலைத் தூண்டியிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0