உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செங்கலடியில் காட்டு யானைகள் அட்டகாசம்; கடைகள், மதில்கள் சேதம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
180 பார்வைகள்

மட்டக்களப்பு – செங்கலடி பதுளை வீதியில் உள்ள நகர் எல்லைப் பகுதிக்குள் நேற்று சனிக்கிழமை (04) இரவு புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்களை விளைவித்துள்ளன.

​​நீண்ட காலமாக செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள கறுத்தப் பாலத்திற்கு அருகிலுள்ள வயல் நிலங்கள் மற்றும் அதனை அண்டியுள்ள பற்றைக் காடுகளுக்குள் தங்கியிருக்கும் யானைக் கூட்டமே இவ்வாறு நகருக்குள் ஊடுருவியுள்ளது.

​நேற்றிரவு ஊடுருவிய யானைகள் வீதியோரத்திலுள்ள கடைகளின் கதவுகள் மற்றும் முன்பகுதிகள், குடியிருப்புகளின் சுற்று மதில்களை உடைத்துள்ளதுடன் மற்றும் தென்னை உள்ளிட்ட பல பயன்தரு மரங்களுக்கும் சேதம் விளைவிக்கப்படுள்ளது.

​அச்சத்தில் பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இதே கறுத்தப் பாலப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்திருந்தார். அந்தச் சோகம் மறைவதற்குள், யானைகள் தற்போது நகரின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளமை மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

​பகலில் பற்றைக் காடுகளில் பதுங்கியிருக்கும் இந்த யானைகள், இரவு வேளைகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0