உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

TN Election 2026 | பெருமை கிடைக்கிறதுக்கு மக்களா கிடைச்சாங்க., துரைமுருகனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி .

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

எடப்பாடி பழனிசாமி ஆரணியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது 2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் நின்றார்.

அப்போது மக்களை சந்தித்து எனக்கு இதுதான் கடைசி தேர்தல்.எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்றார். மக்களும் வாக்களித்தனர். அதிமுக வேட்பாளர் ராமு 700 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்,

இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமை கிடைகும் என்கிறார். உங்களுக்கு பெருமை கிடைக்கிறதுக்காக, மக்களாக கிடைச்சாங்க. அவருக்கு 88 வயதாகிவிட்டது. தேர்தலில் போட்டியிடுவது அவருடைய சொந்த விருப்பம். அதில் தலையிடவில்லை. ஆனால் அவரால் நடக்கவே முடியல. எழுந்திருக்கவே முடியல. எப்படி மக்களுடைய குறைகளை கேட்பாரு.

சட்டசபை உறுப்பினர் என்றால் சட்டசபை தொகுதி முழுவதும் சுழன்று மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும். நடந்து சென்றாலே பிடித்துக் கொண்டு செல்கிறார்.

நான் தவறாக சொல்லவில்லை. நான் அண்ணன் துரைமுருகனை மதிக்கக் கூடியவன் அவருடைய வயது மூப்பை பார்க்க வேண்டும். அதனால் காட்பாடியில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராமுக்கு வெற்றிச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0