உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மியான்மர் அதிபராக மின் ஆங் ஹ்லைங் தேர்வு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கை அந்நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.இராணுவத்தின் ஆதரவுடன் நடைபெற்ற தேர்தல் செயல்முறையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இது, அந்நாட்டின் அரசியல் அமைப்பில் இராணுவத்தின் தொடர்ச்சியான ஆதிக்கத்தை காட்டுகிறது.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.


மியான்மரின் இந்த நடவடிக்கை பெயரளவில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்குத் திரும்புவது போல் தோன்றினாலும், உண்மையில் இது இராணுவத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.


இந்தத் தேர்தலை ராணுவமே ஏற்பாடு செய்ததால் இது சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


அதிபர் பதவிக்கான மூன்று வேட்பாளர்களில் மின் ஆங் ஹ்லேங் ஒருவராக இருந்தார். நாடாளுமன்றத்தில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் மற்றும் நியமிக்கப்பட்ட இராணுவ உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அவரது வெற்றி ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டது போலத்தான் இருந்தது. எனவே, இந்தத் தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0