உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈரானின் இரகசிய இராணுவ தளங்களுக்குள் நுழைந்த நபர் – அரசு எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது இராணுவத்தளம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அமீர்ஹுசைன் ஹதாமி (Amirhossein Hatami) என்பவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டமை, ரகசிய இராணுவ தளங்களுக்குள் நுழைந்ததமை மற்றும் அரசு சொத்துக்களுக்குத் தீ வைத்து சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி முகவரகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஈரானை உலுக்கிய மாபெரும் மக்கள் போராட்டங்களின் போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அந்தப் போராட்டங்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே அமீர்ஹுசைன் ஹதாமிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விசாரணை முறையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0