உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

குவைத்தில் பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை; ஆளில்லா விமானத்தில் ட்ரோன் தாக்குதல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

குவைத் அரசாங்கத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான மினா அல்-அஹ்மதி, இன்று எப்பிரல் 3 ஆம் திகதி ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் குவைத் பெட்ரோலிய நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் பெட்ரோலிய நிறுவனம் தனது ‘X’ கணக்கு மூலம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது,
இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பல செயல்பாட்டுப் பிரிவுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, தீயை அணைக்கவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அவசரகால மீட்புக் குழுக்கள் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த கூடுதல் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம், குவைத்தின் மிகப்பெரிய மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0