உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வனவிலங்குகளை பாதுகாக்க 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள இங்கிலாந்து!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இங்கிலாந்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நூற்றுக்கணக்கான வனவிலங்குகளை அழிவிலிருந்து பாதுகாக்க, அமைச்சர்கள் 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளனர்.

உயிரினப் பாதுகாப்பில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முதலீடு இதுவென்று இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதியுதவியானது இங்கிலாந்து முழுவதும் பறவைகள், நீர்நாய்கள், வண்டுகள், நத்தைகள், சிலந்திகள் மற்றும் கடற்குதிரைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

ஐக்கிய இராச்சியம் உலகின் மிகவும் இயற்கை வளம் குன்றிய நாடுகளில் ஒன்றாகும்.
அங்கு 1970 ஆம் ஆண்டிலிருந்து வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும், ஆறு உயிரினங்களில் ஒன்று அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2030 ஆம் ஆண்டுக்குள் 30% நிலத்தையும் கடலையும் இயற்கைக்காகப் பாதுகாக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான இலக்கை அடைவதில், ஐக்கிய இராச்சியம் கணிசமாகப் பின் தங்கியுள்ளது என்று கடந்த ஆண்டு பசுமைக் குழுக்கள் மதிப்பீடு செய்துள்ளன.


இந்த நிலையில், இயற்கைச் சீரழிவுகளைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இந்த நிதி உயர்வு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0