உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக நேற்று இங்கிலாந்து நடத்திய காணொளிக் கூட்டத்தில் வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கடல் மார்க்கங்களினூடான கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சர்வதேச நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகிய கொள்கைகளின் முக்கியத்துவத்தை விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.


மேலும், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் இந்த நெருக்கடியின் தாக்கத்தையும், வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் மாலுமிகளை இழந்த ஒரே நாடு இந்தியா மட்டுமே என்ற உண்மையையும் அவர் வலியுறுத்தினார் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் யெவெட் கூப்பர் தலைமையில் நடைபெற்ற இந்தக் காணொளிக் கூட்டத்தில் வொஷிங்டன் கலந்துகொள்ளவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0