உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கைத்தமிழர்..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு சென்ற நிலையில், கடந்த 16 வருடங்களாக அவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.
திட்டமிட்ட வகையில் அவரின் புகலிட கோரிக்கையை நிராகரிக்கும் நோக்கில் போலியான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகி உள்ள சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தற்போது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குகதீஸ்வரனை எதிர்வரும் 16ஆம் திகதி நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை கனேடிய குடிவரவு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குகதீஸ்வரனை கடந்த 16 வருடங்களாக நாடு கடத்தும் முயற்சியில் கனேடிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0