உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நேட்டோவை விட்டு விலகும் அமெரிக்கா; அதிரடிப் பரிசீலனை..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா என வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக கூறினார்.
நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் என விமர்சித்துள்ளார்.

பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார்.

இந்நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0