உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மத்திய கிழக்கு மோதலில் உச்சக்கட்ட பதற்றம் – ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ள வளைகுடா நாடுகளின் கடும் எச்சரிக்கை!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடையும் சூழலில் 3 ஆவது உலகப் போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் எந்தவொரு நாடும் நுழையாமல் இருந்த சூழலில், தற்போது அமீரகம் மற்றும் சவுதி நேரடியாக நுழையும் ஆபத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஹார்முஸ் நீரினையை ஈரான் முடக்கியுள்ளதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரமும் முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதன் காரணமாக அமீரக தூதர்கள் அமெரிக்கா, ஐரோப்பா தரப்புடன் பேச்சு வார்ததையில் ஈடுபட்டுள்ளதுடன், இன்று வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா- இஸ்ரேல் போருக்குப் பதிலடியாக ஈரான் அங்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சூழலில், இதனால் உலக எண்ணெய் சப்ளை/எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்கி வருவதாகவும் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமீரகம், சவுதி வெளிப்படையாகவே எச்சரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் சவுதி அரேபியா உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எதிராகத் திரும்பியுள்ளன.
மேலும், ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் அமீரகத்திற்குள் நுழையவோ அல்லது அமீரகம் வழியாகப் பயணம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ், எட்டிஹாட், ஃப்ளை துபாய் என மூன்று முக்கிய விமான நிறுவனங்களும் இது குறித்து அறிவித்துள்ளன.

ஈரான் கடவுச்சீட்டை வைத்திருப்போருக்குத் துபாயில் அனுமதி இல்லை எனவும், அதேநேரம் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இதில் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0