உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதல்: சீனாவில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மிகக் கடுமையான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சீனாவின் உரும்கி நகரில் தொடங்கியுள்ளன.

2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இரு முஸ்லிம் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மிக மோசமான போர்ச் சூழலாக இது கருதப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சீன அரசு இந்த விவகாரத்தில் சமரச முயற்சியை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, போரை நிறுத்துவது (Ceasefire) மற்றும் வர்த்தகத்திற்காக இரு நாட்டு எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்குத் தாலிபான்கள் புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காபூல் நிர்வாகம், இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறி வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் காபூலில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் பிரதிநிதிகள் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த மோதலில் சமரசம் செய்ய முயன்றன. ஆனால், தற்போது அந்த நாடுகள் அமெரிக்கா – ஈரான் போர் விவகாரங்களில் சிக்கியுள்ளதால், சீனா இந்த முயற்சியைத் முன்னெடுத்துள்ளது.
ரமழான் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், சீனாவின் இந்தத் தலையீடு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0