உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்: இந்தியர்கள் மட்டும் இத்தனை பேரா..?…

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்காவை தலமாக கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (oracle) ஒரே அடியாக 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
அந்நிறுவனின் வருவாய் அதிகரித்து வந்தபோதும் உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் அலுவலகங்ளில் இருந்து மொத்தமாக 30,000 பேரை பணிநீக்கம் செய்த அந் நிறுவனத்தின் முடிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பணிநீக்கத்தில் அதிக பாதிப்பு இந்தியாவில் தான். அதாவது, 30,000 பேரில் 12,000 பேர் அந்நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரக்கிள் உடைய அலுவலங்கள் இந்தியாவில் பிரதானமாக பெங்களூரு, ஐதராபாத்திலும், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவில் பிற ஆராக்கிள் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பணிநீக்கம் இந்திய ஊழியர்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.


ஆரக்கிள் உடைய இந்த பாரிய பணிநீக்கத்துக்கு செயற்கை நுண்ணறிவு தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.உலகின் முன்னணி ஏஐ சேவை நிறுவனமான ஓபன்ஏஐ உடன் ஆரக்கிள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ தரவு மையங்கள் அமைக்க 156 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தரவு மையங்களில் பொறுத்த பிரத்தேயேக சிப்-களை வாங்குவதற்காக ஆரக்கிள் நிறுவனத்துக்கு 50 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று தெரிகிறது. இந்த செலவுகளை சமாளிக்க ஆரக்கிள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து சிக்கனத்தில் ஈடுபட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

அதேநேரம் அந்நிறுவனதுக்கு வருவாய் அதிகரித்தபோதும் ஏற்கனவே 108 பில்லியன் டாலர் கடன் உள்ளது.இதனால் அந்நிறுவனம் கடும் அழுத்தத்தில் இருப்பதால் செலவு விஷயத்தில் ஆரக்கிள் கவனமாக செயல்பட்டு வருகிறது.இதற்கிடையே இந்த பாரிய பணிநீக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் டெக்கி-களை ,அடுத்த நாமாக இருப்போமோ என்ற பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0