உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி: கோழிப் பண்ணையாளர் சங்கம் தகவல்!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் முட்டைகளை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக தமிழ்​நாட்டு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச் சங்​கத்​தின் செய​லா​ளர் சுந்​தர்​ராஜன், மத்திய கிழக்கு ஆசிய நாடு​களில் நில​வும் போர்ப் பதற்​றம் காரண​மாக கப்​பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டை ஏற்​றும​தி​யும் குறைந்​துள்​ளது என்றார்.

“எனவேதான் விமானம் மூலம் முட்டை ஏற்​றுமதி செய்​வதற்​கான நடவடிக்கைகள் மேற்கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. அதேவேளை​யில் கப்​பல்​கள் மூலம் ஓரிரு கொள்கலன்களில் முட்​டைகள் ஏற்​றுமதி நடை​பெற்று வரு​கிறது. போர்ப் பதற்​றம் தணிந்தால் முட்டை ஏற்​றுமதி சீராகும்,” என்றார் திரு சுந்தர்ராஜன்.
நாமக்கல் வட்டாரங்களில் 1,200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

டுபாய், குவைத், கட்டார், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கப்பல்களில் நாள்தோறும் 80 லட்சம் முட்டைகள் கொள்கலன்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே, கோழிப் பண்​ணை​களில் 21 நாள்​களுக்கு ஒரு முறை கோழிகளின் ரத்த மாதிரி​கள் எடுக்​கப்​பட்டு ஆய்​வுக்கு அனுப்​பப்​படுவதாகவும் பறவைக் காய்ச்​சல் பாதிப்பின்மை காரண​மாக ஏற்​றுமதி கட்டுப்பாடுகள் இன்றி நடை​பெறுவதாகவும் திரு சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0