உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

‘பறக்கும் கார்’ சேவையை விரைவில் தொடங்கத் திட்டமிடும் ஜப்பான்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
79 பார்வைகள்

ஜப்பானில் கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் வணிகரீதியிலான ‘பறக்கும் கார்’ சேவைகளை 2027 ஆம் ஆண்டில் அல்லது 2028ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் சுற்றுலாப் பயணங்களுக்காக இச்சேவை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர், நகரங்களையும் விமான நிலையங்களையும் இணைக்கும் போக்குவரத்துச் சேவையாக இது விரிவுபடுத்தப்படும்.நூற்றாண்டின் மிகப்பெரிய போக்குவரத்துப் புரட்சியாகக் கருதப்படும் இந்தத் திட்டம், மிக விரைவில் நனவாகவுள்ளது.


மின்சாரத்தில் இயங்கும் இவ்வகை கார்களுக்கு ஓடுபாதை தேவையில்லை. செங்குத்தாக மேலேறித் தரையிறங்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன், குறைவான சத்தத்துடன் இயங்கக்கூடியவை. சிறிய இடங்களிலும் தரையிறங்க முடியும் என்பதால் நெரிசலான நகரங்களுக்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வட்டாரப் பகுதிகளுக்குப் புதிய போக்குவரத்துத் தீர்வை வழங்கவும் இவை உதவும்.


பறக்கும் கார்களை உருவாக்குவதில் நிறுவனங்களுக்கிடையே போட்டி வலுத்து வருவதாகத் தெரிகிறது.கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஒசாக்கா-கன்சாய் கண்காட்சியில் இவ்வகைப் பறக்கும் கார்களின் செயல்பாடு குறித்த நேரடி விளக்கக் காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் அப்போது பயணிகள் யாரும் காருக்குள் இல்லை.

பறக்கும் கார்கள் தொடர்பில் அனைத்துலக விதிமுறைகள் இன்னும் வரையப்படவில்லை,இருப்பினும் ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு பாதுகாப்பு அம்சங்களை ஏற்கெனவே நிறுவியுள்ளது. மின்கலன்களுக்குச் செயற்பாட்டு நிபந்தனைகளும், நீர்நிலைகளுக்கு மேல் செல்லும் பறக்கும் கார்களில் உயிர்காப்பு அங்கிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதும் அவற்றில் அடங்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0