உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஏர் கனடா விமான விபத்து:வெளியான பகீர் தகவல்கள்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் கடந்த மார்ச் 22ஆம் திகதி தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி இரண்டு விமானிகள் பலியான சம்பவத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்துப் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

விபத்து நடந்த இரவு 11:37 மணியளவில், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, விதிகளை மீறி இரண்டு விதமான பொறுப்புகளை ஒருவரே கவனிக்கும்படி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

லாகார்டியா விமான நிலையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறை ஆவணங்களின்படி, நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக ‘லோக்கல்’ மற்றும் ‘கிரவுண்ட்’ ஆகிய இரண்டு முக்கியபணிகளையும் ஒருவரே கவனிக்கும்படி இணைக்கக் கூடாது என்பது விதியாகும்.
ஆனால், விபத்து நடந்த நேரத்தில் ஓடுதளத்தை நிர்வகிக்கும் அதிகாரி, தரைவழிப் போக்குவரத்தையும் கவனித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி அந்த நேரத்தில் பணியில் இருந்த இரு அதிகாரிகளில் யார் தரைவழிப் போக்குவரத்தைக் கவனித்தார்கள் என்பதில் முரண்பட்ட தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முழுவதும் நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான பணிச்சுமையை அதிகரித்துள்ளதோடு, இத்தகைய ஆபத்தான விதிமீறல்களுக்கும் வழிவகுப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


1997 ஆம் ஆண்டில் இதே விமான நிலையத்தில் நடந்த ஒரு விபத்திற்குப் பிறகுதான், நள்ளிரவுக்கு முன் பணிகளை ஒருங்கிணைக்கக் கூடாது என்ற விதி கொண்டு வரப்பட்டது.

தற்போது அதே விதி மீறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0