உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

53 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்கா!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
57 பார்வைகள்

நிலவை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டு கிறார்கள். குறிப்பாக கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டிப் போட்டுக் கொண்டு நிலா குறித்து ஆய்வுகளைச் செய்தன. இதற்காகத் தொடர்ச்சியாகப் பல சாட்டிலைட்களையும் அனுப்பின. ஆனால், அதன் பிறகு நிலவு குறித்த ஆய்வுகளை இரு நாடுகளுமே கைவிட்டு விட்டுவிட்டன.


இந்நிலையில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நாளை மனிதர்களை நிலவுக்கு அனுப்பவுள்ளது நாசா. இதற்காக ”ஆர்டெமிஸ்” என்ற திட்டத்தை தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
நிலவில் உள்ள கனிம வளங்களைப் பயன்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு ‘பயிற்சி மையமாக’ நிலவைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


இதற்காக எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் ஜெப் பெசோஸின் ‘புளூ ஆரிஜின்’ போன்ற தனியார் நிறுவனங்களும் நாசாவுடன் கைகோர்த்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனையோட்டத்தில் 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் 53 ஆண்டுகளுக்கு பிறகு,


நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ராக்கெட் மூலம் இவர்கள்விண்ணில் ஏவப்பட உள்ளனர்.


நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த 10 நாள் பயணம், மனித குலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத ஆழமான பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்லும். கடந்த 1972 ஆம் ஆண்டு ‘அப்பல்லோ 17’ விண்கலத்திற்கு பிறகு, மனிதர்கள் நிலவில் கால் தடம் பதிக்கவில்லை. தற்போது சுமார் ரூ.7½ லட்சம் கோடி (93 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எதிர் வரும் 2028 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் இறுதி இலக்காகும்.விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ள சீனா, 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத்திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட இந்ததிட்டத்தை முடக்கிவிட்டுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் இன்று நிலவு நோக்கிய இந்த பயணம் தொடங்கும்,

இதனை ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0