உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

உயரும் மசகு எண்ணெய் விலை: தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியைக் குறைக்க சீனா முடிவு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
57 பார்வைகள்

ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேச மசகு எண்ணெய்யின் விலை உயர்வு காரணமாக, ஏப்ரல் மாதம் முதல் மசகு எண்ணெய் சுத்திகரிப்பின் அளவைக் குறைக்கப் போவதாகச் சீனாவின் சிறிய அளவிலான தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் அறிவித்துள்ளன.

கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து மலிவான விலைக்கு மசகு எண்ணெயைப் பெற்று இலாபம் ஈட்டி வந்த இந்த நிறுவனங்கள், தற்போது அமெரிக்காவின் தற்காலிக கட்டுப்பாட்டுத் தளர்வுகளால் இந்திய உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக, போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய்க்கு 10 டொலர் தள்ளுபடியில் கிடைத்த ஈரானிய எண்ணெய், தற்போது பிரெண்ட் மசகு எண்ணெய் விலைக்கு இணையான விலையில் விற்கப்படுவது இந்த நிறுவனங்களின் இலாபத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக, தனியார் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அரசாங்கம் எரிபொருள் விலையை ஓரளவுக்கு மேல் உயர்த்தக் கூடாது என உச்சவரம்பு விதித்துள்ளதால், மசகு எண்ணெய் யின் விலை உயர்ந்தாலும் அந்தச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாமல் சுத்திகரிப்பு நிலையங்கள் நஷ்டத்தைச்சந்தித்து வருகின்றன.


கடந்த மார்ச் 23ஆம் திகதி சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 1,160 யுவான் மற்றும் 1,115 யுவான் உயர்த்திய போதிலும், அது சர்வதேச மசகு எண்ணெய் விலையேற்றத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான புதிய மசகு எண்ணெய் கொள்முதல் திட்டங்களை இந்த நிறுவனங்கள் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளன.

தங்களிடம் உள்ள குறைந்த விலையிலான இருப்பு ஏப்ரல் இறுதி வரை மட்டுமே நீடிக்கும் என்பதால், மூலதன நெருக்கடியில் உள்ள பல நிறுவனங்கள் முன்கூட்டியே உற்பத்தியை முடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

உள்நாட்டில் எரிபொருள் தேவை குறைவாக இருப்பதும், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும் சீனப் பொருளாதாரத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0