உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்காக , இங்கிலாந்தில் 12இலட்சம் பேருக்கு உடல் எடை குறைப்பு மருந்துகள்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேருக்கு உடல் எடையைக் குறைக்கும் ”வெகோவி” (Wegovy) ஊசி ,தேசிய சுகாதார சேவை மூலம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

”வெகோவி” என்ற வர்த்தகப் பெயரில் விற்கப்படும் மற்றும் நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த வாராந்திர ஊசி, GLP-1 ரிசெப்டர் ஆகோனிஸ்ட் எனப்படும் ஒரு வகை மருந்தாகும்.

இது இரத்தச் சர்க்கரை, பசி மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் இயற்கையான ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது.

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, இதயம் மற்றும் இரத்த நாளங்களில் நேரடியாகச் செயல்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சில குறிப்பிட்ட இதயம், சுற்றோட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட, அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவதற்கு ​​தேசிய சுகாதார சேவையின் செலவினக் கண்காணிப்பு அமைப்பான தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு நிறுவனம் தற்சமயம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலமாக இங்கிலாந்து முழுவதும் 12 இலட்சம் மக்கள் பயனடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0