உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈராக்கில் அமெரிக்க பத்திரிகையாளர் கடத்தல் – அதிர்ச்சி சம்பவம்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சன். இவர் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை களத்திற்கே நேரில் சென்று செய்தி சேகரித்து பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு வந்தார்,


இந்நிலையில், ஜெல்லி கிட்டில்சன் ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, மத்திய கிழக்கு போர் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தார். அவர் நேற்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் சடோன்.பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் பத்திரிக்கையாளர் ஜெல்லி கிட்டில்சனை காரில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈராக் பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஜெல்லி கிட்டில்சனை கடத்தி சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0