உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாடு முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்- இன்று முதல் விற்பனை செய்ய உத்தரவு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
52 பார்வைகள்

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க நாடு முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட இ-20 பெட்ரோலை இன்று முதல் விற்பனைசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு ஆசிய போர் சூழல் நெருக்கடியால் பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நெருக்கடி சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசு, மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கவும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக, இந்தியா முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட இ-20.பெட்ரோலை இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றும், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேணடும் என்றும் எண்ணெய் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு முன்னதாக 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. இருப்பினும், தற்போது அந்த இலக்கு மாற்றியமைக்கப்பட்டு 2025-26 நிதியாண்டிலேயே முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல எரிபொருள் நிலையங்களில் இ-20 விற்பனை தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய உத்தரவு அதன் முழுமையான செயலாக்கத்துக்கு வழிவகுக்கும்.


மந்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

விற்பனை செய்யப்படும் பெட்ரோல் குறைந்தபட்சம் ’95 ஆராய்ச்சி ஆக்டேன் எண்’ (ஆர்.ஓ.என்.) தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. எத்தனால் இயற்கையிலேயே அதிக ஆக்டேன் திறன் கொண்டது என்பதால், பெட்ரோலுடன் கலக்கும்போது அது எரிபொருளின் தரத்தை உயர்த்தி வாகனங்களின் என்ஜினைப் பாதுகாக்கிறது.

உள் நாட்டில் தயாரிக்கப்படும் கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களிலிருந்து பெறப்படும் எத்தனால், சுற்றுச்சூழலுக்கு சாதகமான மாற்று எரி பொருளாக கருதப்படுகிறது. இது பெட்ரோலுடன் கலக்கப்படும் போது உமிழ்வுகளை குறைக்க உதவுவதோடு, எண்ணெய் இறக்குமதி சார்பையும் குறைக்கும்.மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு மாற்று எரிபொருளாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் இறக்குமதி சார்ந்திருப்பதை பெருமளவு குறைக்கும். எத்தனால் உற்பத்தி என்பது சர்க்கரை ஆலைகளுக்கு கிடைத்த கற்பகவிருட்சமாகும்.

போதிய அளவில் எத்தனால் உற்பத்தியும், கரும்புக் கழிவுகளில் இருந்து மின்சாரம் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்பட்டால் ஒரு டன் கரும்பிலிருந்து ரூ.21 ஆயிரம் வருவாய் ஈட்ட முடியும். கரும்பு விவசாயமும், கரும்பு ஆலைத் தொழிலும் அதிக லாபம்
கொட்டும் தொழிலாக மாறும் என்றும், கிராமப்புற பொருளாதாரத்துக்கும் பலன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2023-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தைக்குவந்த பெரும்பாலான வாகனங்கள் இ-20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன இருப்பினும், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் எரிபொருள் செயல்திறனில் 3 முதல் 7 சதவீதம் வரைகுறைவு காணப்படலாம் என்றும், சில ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேய்மானம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறும்போது. “பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு எத்தனால் கலந்த இ-20 பெட்ரோலை விநியோகிப்பார்கள்.இதுதொடர்பான அறிவிப்பு வந்தது. ஆனால் பெட்ரோல் வந்தால் தான் அதுகுறித்து எதுவும் கூற முடியும்.

விரிவான விளக்கம் எதுவும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை டீலர்களுக்கு அளிக்கவில்லை.விலையில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. நம் நாட்டை பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை. காரணம் ஒரே நாட்டில் எரிபொருள் கொள்முதல் செய்யப்படுவதில்லை.எனவே வாகன ஓட்டிகள் தேவைக்கு பெட்ரோல் போட்டு கொண்டு வாகனங்களை இயக்கலாம்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0