உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரச நிதியில் வீதி புனரமைப்பு: தொண்டமனாறு சந்தியில் அடிக்கல் நாட்டல்..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து, தொண்டமனாறு–வல்லை–துன்னாலை வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா, வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி (NPP) அமைப்பாளருமான நிஷாந்தன் ஜனனி தலைமையில், தொண்டமனாறு சந்தியில் இன்று (பிற்பகல் 6.00 மணியளவில்) நடைபெற்றது.


வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 3.9 கிலோமீற்றர் நீளமுடைய இந்த வீதி, ரூபா 252 மில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி அபிவிருத்தி குழுத் தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதல் கல்லை நாட்டி வைத்தார்.


அத்துடன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோளியூர் ரமணன், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சாம், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்களான அன்பு மற்றும் திருமதி நிஷாந்தன் ஜனனி, சிகரம் அமைப்பின் வடக்கு மாகாண அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான ஆசிரியர் உதயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

மேலும், இந்நிகழ்வில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த வீதி கடந்த அரசாங்க காலத்தில் புனரமைப்பிற்கென அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

114 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

55 0 0
Uncategorized

மெகசின் சிறைச்சாலையில் மோதல்; கைதி ஒருவர் உயிரிழப்பு.!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

62 0 0
Uncategorized

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

கொழும்பு – இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றைக் குறிவைத்து இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.…

57 0 0