ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கட்டார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும்.
தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.ஆனால், ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Posts
ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமான மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!
தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி,...
மாயமான வணிக வானூர்தியின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!
பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன வணிக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது.புதன்கிழமை அன்று...
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. புதன்கிழமை இரவே ஈரான்...
“தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க தீர்மானம்!
சிரியாவை "தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு" என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...
ஈரானில் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின்...
பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன்...
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வலிமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.அந்த நீரிணையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய...
சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு!
சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.ஜனாதிபதி மெக்ரோனின் வாகனப் பேரணி...
அரபிக் கடற்பகுதியில் வணிக வானூர்தி மாயம்!
ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக வணிக வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர்...










