உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிசூடு! வெளியான காரணம்..!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வெனிசுவேலாவின் தலைநகர் கரகாஸ் நகரில் நேற்றையதினம்(5) மாலை துப்பாக்கிச் சத்தமும், வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாக வெளியாகிய காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ கைதானதாக கூறப்படும் சூழ்நிலையில், நகரம் முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உச்ச எச்சரிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள காணொளிகளில், கரகாஸ் வானில் வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், வேறு ஒரு காணொளியில் துப்பாக்கிச் சத்தமும் கேட்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தலைநகரில் உள்ள பாதுகாப்பு அணிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், மிராஃப்ளோரஸ் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள உர்தனெட்டா அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதுகுறித்து வெனிசுவேலா தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அனுமதியின்றி பறந்த ட்ரோன்களை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்” என தெரிவித்துள்ளது.மேலும், எந்தவித மோதலும் நடைபெறவில்லை. நாடு முழுவதும் நிலைமை அமைதியாக உள்ளது” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இருப்பினும், அந்த ட்ரோன்களை யார் இயக்கியது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.இதற்கிடையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி அளித்த தகவலில், வெனிசுவேலாவில் இருந்து வரும் துப்பாக்கிச் சத்தம் தொடர்பான தகவல்களை அமெரிக்கா கவனமாக கண்காணித்து வருவதாகவும், “இந்த சம்பவங்களில் அமெரிக்கா எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மிராஃப்ளோரஸ் மாளிகை அருகே செயல்பட்ட பல பாதுகாப்பு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட குழப்பமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வெளியான தகவலின் படி, அந்த பகுதியில் பறந்த ஒரு ட்ரோனை மிராஃப்ளோரஸ் பொலிஸாரும் மாளிகை பாதுகாப்பு அணியும் சுட்டு வீழ்த்த முயன்றதாகவும், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0