இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் இரவு எல்லை தாண்டி மீன்பிடித்த நிலையில் இலங்கை கடற் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 மீனவர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


Related Posts
மக்களின் ஜனநாயக உரிமைகளை பின்னுக்குத் தள்ள வேண்டாம்.!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்து முற்றிலும் முறையற்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கோர விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.!
கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இவ்விபத்துச் சம்பவம் குருநாகல்,...
சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்டவிரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும்...
போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!
சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....
அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!
வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...
இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு
இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...
கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...
தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...
வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!
வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...
பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!
பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...










