• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இன அழிப்பு வாரத்தின் 2ஆம் நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

admin by admin
May 13, 2025
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
இன அழிப்பு வாரத்தின் 2ஆம்  நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசின் கொடூரமும் கஞ்சி கூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக இன அழிப்பு வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் புதிய உறுப்பினர்களான சிவம்பாக்கியநாதன், சுதர்சன்,பிரேமானந்தன் உட்பட பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உப்பில்லா கஞ்சிகாய்ச்சும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது இறுதி யுத்ததின்போது அழிப்புசெய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமது உறவுகளை தேடி உயிர்நீர்த்த தாய்மார்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் ,துண்டுப்பிரசுரங்களும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதன்போது பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி,
இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன அழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நேற்றைய தினம் 12ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 17ஆம் தேதி வரை எங்களுடைய அப்பாவி பொதுமக்கள் இறுதி யுத்தத்தின் போது உணவுக்கு கஷ்டப்பட்டு உயிரிழந்த சம்பவங்களை நினைவு கூறும் முகமாக நாங்கள் இன்றைய தினம் காந்தி பூங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆகிய நாம் முன்னெடுக்கின்றோம்.

முள்ளி வாய்க்காலில் இறுதி நேரத்தில் கஞ்சி கூட கிடைக்காமல் எத்தனையோ அப்பாவி சிறுவர்கள் பொதுமக்கள் வயோதிபர்கள் தாய்மார்கள் என்று கையில் இருந்த கொஞ்சம் பிடி அரிசிகளை சேகரித்து சிறிய அளவு உப்பை சேர்த்து கிடைத்த நீரை ஊற்றி கஞ்சி தயாரித்து குடிப்பதற்கு பாத்திரங்கள் இன்றி சிரட்டைகளில் தான் அந்த கஞ்சியினை வேண்டி அதுவும் வரிசையில் நின்று வேண்டுவதற்கு பாடுபட்டு கஞ்சிகளை அருந்தி உயிர் தப்பியவர்களும் உண்டு அது கிடைக்காமல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களும் சிறுவர்களும் இருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு கடைசி யுத்தத்தில் இந்த இலங்கை அரசாங்கம் செய்த அநியாயம் கொடூரமான செல் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் இதன் போது எமது மக்கள் சிதறிக் கொண்டிருந்த வேளையில் இந்த கஞ்சிக்கு கூட இல்லாமல் நிறைய கஷ்டங்களை அனுபவித்து உயிர் இழந்த மக்களை நினைவு கூறும் முகமாக இன்று வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் அனைவரும் இன அழிப்பு வார கஞ்சியினை வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்லும் முகமாக துண்டு பிரசுரங்களும் வழங்கி இந்த மக்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைவு கூறும் முகமாக கஞ்சியினை மக்களுக்கு வழங்கிய நினைவு கூர்ந்து வருகின்றோம்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து இந்த கஞ்சியினை பருகுகின்றார்கள் இதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வார்கள் இளம் சமூகங்கள் இதனைப் பற்றி மறந்தவர்களாகவும் அல்லது அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் அதற்கு எமது இனம் இதனை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கட்சியினை பரிமாறுகின்றோம்.

சர்வதேசத்திற்கும் இதனை எடுத்துக்காட்டி இத்தனை வருடமும் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிர்வித பதிலும் கிடைக்கவில்லை ஆகவே சர்வதேசமும் இனியும் பாராமுகமாக இருக்காது எங்களுக்கு நடைபெற்ற இந்த அநியாயத்துக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.

Related Posts

தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்டது இலங்கை ரூபாய்

by selvan
May 26, 2026
0

சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது ரூபா மீளவும் பலமடையத் தொடங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று...

வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

by selvan
May 26, 2026
0

வடமாகாணத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.யாழ் மாவட்டத்திற்கு இன்று (26) வருகை தந்திருந்த பாதுகாப்பு...

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

மாகாண சபைத் தேர்தலை நடத்த பணம் தடை இல்லை!

by selvan
May 26, 2026
0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி  ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு...

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

கொழும்பில் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!

by selvan
May 26, 2026
0

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு, கஹதுடுவ - தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று...

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

நிறைவடையவுள்ள சிவனடிபாத மலை பருவகாலம்.!

by Mathavi
May 26, 2026
0

2025/2026 சிவனடிபாத மலை பருவ காலம் கடந்த 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம்பெற்று வந்த நிலையில்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் டுபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்கு பாரியளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் பிரதான ஐந்து கடத்தல்காரர்களில்...

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

இந்தத் திறமையற்ற அரசை மக்களே விரட்டியடிப்பார்கள்.!

by Mathavi
May 26, 2026
0

"நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி கனவு காண்பதாக ஆளுந்தரப்பு கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது. இந்தத்...

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பல ஏக்கர் காணிகள் மிக விரைவில் விடுவிப்பு.!

by Mathavi
May 26, 2026
0

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின்...

விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாண்டுவ - மொனராகலை வீதியின் 282ஆம் மைல்கல்...

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

by Mathavi
May 26, 2026
0

சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி