பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்கள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மகளின் துயரத்தில் நாங்களும் கலந்துகொள்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.





Related Posts
புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!
"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் வலுவாக முகம் கொடுத்து...
சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!
"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...
கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...
புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாகும்.!
"நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு...
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த சுவாமி சுத்தானந்தகிரி இலங்கை விஜயம்.!
உலகப் புகழ்பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியர் சுவாமி பரமஹம்ச யோகானந்தர் 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப்...
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...
பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (29)...
நுவரெலியாவில் இடம்பெற்ற வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!
நுவரெலியாவின் இராகலை மஹகுடுகலை, அப்பிள் பாம் பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர், ஹைபொரஸ்ட் இல.01-ஐச் சேர்ந்த மகாலிங்கம் சித்திராதேவி எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்...










