குருநாகல் – பௌத்தலோக பகுதியில் மதிப்பீட்டு அதிகாரி ஒருவர் 50,000 ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் – பௌத்தலோக பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறுதி காணி தொடர்பான பத்திரத்திற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தொகையை குறைப்பதற்காக இந்த கையூட்டல் பணத்தை கேட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் வடமேல் மாகாண சபையின் மாகாண வருமான திணைக்களத்தில் பணிபுரிந்த மதிப்பீட்டு அதிகாரி என கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.