தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த நபர் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், குற்றத்திற்கு உதவியதற்காக மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் 38 மற்றும் 43 வயதுடைய தெஹிவளை மற்றும் மிஹிந்தலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.