கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டம் மற்றும் சாலை மூடல் காரணமாக அப்பகுதியிலும், அருகிலுள்ள சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT