• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதனன்று ஆரம்பம்.!

Mathavi by Mathavi
March 17, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதனன்று ஆரம்பம்.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 திகதி புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை – நான்கு நாட்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அதன் முழு விபரமும் வருமாறு:

ADVERTISEMENT

வருடாந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110
மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84
மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப் பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மதிப்புமிக்க பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்களை முறையே 2020 ஆம் கல்வியாண்டு பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும், 2021 ஆம்
கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் கலைப்பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒரு மாணவரும் பெறுவதுடன், 2022 ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒரு மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறுகின்றனர்.

மேலும், தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தை பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரை பங்குனி மாதம் 26ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்பேருரை பி.ப 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.

சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தகைசால் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை, “இலங்கை, வடமாகாணத்தில் குடித்தொகை வேறுபாட்டு ஒழுங்கும், இடஞ்சார் பரம்பல் மாற்றங்களும் 1871-2022 (The Population Variations Pattern and Spatial Distributional Changes in the Northern Province of Sri Lanka – 1871-2022)” என்ற தலைப்பிலும், மதிப்புமிகு சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி. டர்சி தொறடெனியா, “ பெண்கள் ஆரோக்கியத்தின் முன்னோடி கலாநிதி சிவா சின்னத்தம்பி (Pioneer in Women’s Health Dr.Siva Chinnatamby)” என்ற ஆய்வுத் தலைப்பிலும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தவிருக்கின்றனர்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

      தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

      by Thamil
      May 28, 2025
      0

      அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. குறிந்த போட்டியானது திருக்கோவில் வலயக்...

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

      by Thamil
      May 28, 2025
      0

      காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை...

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர். எம்பிலிட்டிய ஜயசிங்க...

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      மட்டக்களப்பு - திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (28)இடம்பெற்றுள்ளதாக...

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      by Thamil
      May 28, 2025
      0

      2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு...

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட, முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது. திஹாறிய அல்...

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      நீர்கொழும்பு - தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு...

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்...

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம்...

      Load More
      Next Post
      யாழில் தினமும் மதுபோதையில் அயல்வீட்டாரை அச்சுறுத்தும் நபருக்கு நேர்ந்த கைது.!

      யாழில் தினமும் மதுபோதையில் அயல்வீட்டாரை அச்சுறுத்தும் நபருக்கு நேர்ந்த கைது.!

      யாழில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்.!

      யாழில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்.!

      வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது மக்கள் போராட்ட முன்னணி.!

      வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது மக்கள் போராட்ட முன்னணி.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி