வடமராட்சி கிழக்கு யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி நேற்று (25) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி.சுதர்சினி சுதந்திரன் தலைமையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது.
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.செல்லத்துரை ஸ்ரீஇராமச்சந்திரன்,
சிறப்பு விருந்தினராக கட்டைக்காடு பங்குத்தந்தை அ.அமல்ராஜ், வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.







