பதுளை நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாலை 24 வயதுடைய இளைஞன் ஒருவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இவரை சோதனைக்குட்படுத்திய போது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
சந்தேகநபரை இன்று புதன்கிழமை (26) பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.