பனைசார் உற்பத்தியாளர்கள் மற்றும் பனம் பொருள் ஏற்றுமதியாளர்கள் இன்று (18/01) சனிக்கிழமை பிற்பகல் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி.சகாதேவன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து பெருந்தோட்ட பிரதி அமைச்சர் சு.பிரதீப்பை சந்தித்திருந்தனர்.
இதன்போது பனை சார் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தாம் எதிர்நோக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக பெருந்தோட்ட பிரதி அமைச்சர் பிரதீப்பிடம் எடுத்துரைத்திருந்தனர்.

