வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்
வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மூங்கில் வீடுகள் பெளத்த சின்னங்களுடன் கரையொதுங்கி வருகின்றது.நேற்றும் இவ்வாறு ஒரு மூங்கில் வீடு பெளத்த சின்னங்களை தாங்கி கரையொதுங்கியது
இந்த நிலையிலையே முரளிதரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை புலிகள் இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் கரையொதுங்காத குறித்த வீடுகள் சில வருடங்களாக ஏன் தமிழர் பிரதேசத்தில் கரையொதுங்குகின்றது
நேரடியாக தமிழர் தேசத்தில் பெளத்த சின்னங்களை நிலை நாட்டினால் மக்கள் குழம்புவார்கள் என்று இவ்வாறு கடல் வழியாக பெளத்த சிலைகளை அனுப்பி தமிழர் தேசத்தில் பெளத்த ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளவா முயற்சிக்கின்றார்கள்
குறித்த வீட்டில் இறுதி சடங்கு என பொறிக்கப்பட்டுள்ளது அவ்வாறு என்றால் ஏன் 2009 முன்னைய காலத்தில் இந்த சடங்குகள் செய்யப்படவில்லை.இப்போது செய்வதற்கான காரணம் என்ன?
தாய்லாந்துக்கும் இலங்கைக்குமான தொடர்புகள் நிறையவே உண்டு பெளத்த பிக்குகள் தாய்லாந்துக்கு சென்றுவருகிறார்கள்
ஆனால் அங்கிருந்துதான் பெளத்த சிலைகள் கடல் வழியாக அனுப்பப்படுகின்றது
நேற்றும் 18 பெளத்த சிலைகள் நாகர்கோவிலில் கரையொதுங்கி உள்ளன தற்போது சிலைகள் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் உள்ளன
வடமராட்சி கிழக்கில் 18 கிராமங்கள் உள்ளன 18 பெளத்த சிலைகளும் கரையொதுங்கியமை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொன்று என்ற அடிப்படையில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறு கடல் வழியாக கரையொதுங்கும் சிலைகளை குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.