ஒன்றரை மாதங்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டால் ஊழல், மோசடி, இலஞ்சம், நிதி மோசடி தொடர்பான விசாரணைகளில் நாடு எதிர்பார்த்த பலனைப் பெற முடியும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஊழல், மோசடி, இலஞ்சம் மற்றும் நிதி மோசடி தொடர்பான எந்தவொரு விசாரணைகளையும் அரசு நிறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த விசாரணைகள் எதுவும் அரசியலாக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், தமது அரசு பொலிஸாரைச் சிபாரிசு செய்ய வைத்துள்ளதாகவும், இரகசியப் பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவை அனைத்தையும் சுயாதீனமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், ஊழல், மோசடி, இலஞ்சத்துக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்பது நாட்டு மக்களுடன் அரசு செய்துள்ள உடன்பாடு என்றும் சுட்டிக்காட்டினார்.