Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில், 35,000 க்கும்…
காணாமல்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவதினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். 15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு, துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் […]
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் […]
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். […]
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் (16) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மீகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞரொருவரும் சிறுமியின் உறவினர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சந்தேக நபர்கள் மூவரும் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் […]
ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று வெள்ளிக்கிழமை (16) விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது குறித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்தனர் என்றும், எனினும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இடத்தில் இதற்கு […]
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை […]
தேசிய லொத்தர் சபையினால் 2023 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களின் சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் வாகனங்கள் வென்றவர்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிதி அமைச்சின் கேட்போர்கூடத்தில் (16) நடைபெற்றது. இதன்போது, கொவிசெத, மெகா பவர், மெகா பவர் 60 உள்ளிட்ட லொத்தர் சீட்டிழுப்புக்களின் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசு மற்றும் வாகன பரிசுகள், விற்பனை முகவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசுகள், சான்றிதழ்கள் என்பனவும் […]
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.