இராணுவத்தினருக்கு உணவு வழங்குவதற்குப் பதிலாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவுத் தொகையைச் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை இராணுவத்திடமிருந்து சலுகை விலையில் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சில் (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதனைச் செய்வதன் மூலம் இராணுவ உறுப்பினர்களின் நிதிப் பலம் மேலும் ஸ்திரமாக இருப்பது மட்டுமன்றி, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பனவும் மிகவும் தீவிரமானதாக இருக்குமெனன பிரமித பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.