அடை மழையிலும் அலைகடலென திரண்ட மக்கள் விழி நீரால் பிரகாசித்த சுடர்கள். விவரிக்க முடியாத உணர்வு.
அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விழிநீரால் நனைந்த செங்குருதி நிலமாகியது
ஆயிரமாயிரம் வீரத்தின் வித்துக்களால் செழித்த விளை நிலத்தில் ஒன்று சேரக்கூடி தமிழர் தம் ஆதர்ச புருசர்களாகிய வீரகாவிய நாயகர்களான மான மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தியது
2008ற்கு முன்னர் எப்படி தமிழர் தாயகத்தில் தம் இதயக் கோயில்களான மாவீரர் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியதோ அதுபோலவே ஒன்று கூடி மக்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொண்டனர் அதுமட்டுமன்றி நிகழ்வு திறன்பட மாவீரர் பணிக்குழுவினால் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது
மக்கள் உணர்வெழிச்சியுடன் பங்கு பற்றுதலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் எவ்வித ஆச்சரியமுமில்லை ஏனெனில் கிளிநொச்சி தமிழரசு தலைமையின் அடையாளப் பண்புகளில் இதுவும் ஒன்றே எனக்கூற வேண்டும். மாவட்ட தலைமை இளைஞர்களிடம் (பணிக்குழு) பொறுப்புக்களை முறையாக வழங்கி வழிநடத்தி முடித்திருக்கின்றது என்றே கூறவேண்டும். கிளிநொச்சி மண் தனது இனமான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் வெற்றியும் கண்டுள்ளது என்பதை இவ் மக்கள் திரட்சி உணர்வு பூர்வமான எழுச்சி பறைசாற்றி நிற்கின்றது
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் எங்கும் எத் திசையிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு துயிலுமில்ல வளாகம் எங்கும் காண முடிந்தது இத்திரட்சி தமிழ் தேசியம் மீது எம் மக்கள் கொண்ட பற்று உருதியையே எடுத்துக்காட்டுகின்றது
துயிலும் இல்ல மக்கள் எழுச்சியானது மக்கள் என்றும் எப்போதும் உணர்வு ரீதியாக ஒன்று படுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு பறைசாற்றி நிற்கிறார்கள் எவ்வெழுச்சி காலத்தின் கட்டாயம் சிங்கள தேசத்திற்கு தம் எண்ணக்கிடக்கையை தமிழர் தேசமெங்கும் பொங்கு தமிழ் போல் திரண்டெழுந்து ஒன்று கூடி புஜித்து அஞ்சலி செலுத்தி சொல்லியிருக்கிறது வரலாற்று மரபுவழி தொடர்கிறது
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்