Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்று பிற்பகல் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவநாயகம் தேவானந்த் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முனைவர் (Ph.D )பட்டம் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், செயல் திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) இயக்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார்.
தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள என 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களாலும் அவசர இலக்கம் தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள அவசர இலக்கமான 107 எனும் இலக்கம் நாளைய தினத்திலிருந்து நடைமுறைக்கு […]
மன்னார் மாவட்டத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன்,சாள்ஸ் நிர்மலநாதன்,கே.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண ஆளுநர் இறுதி […]
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் தேர்தல் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கட்சியை பொறுத்தவரை எந்த தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கின்றோம். ஆனால் எந்த தேர்தல் நடக்கும் என யாராலும் கூற முடியாமல் இருக்கின்றது. நாட்டினுடைய […]
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு வெங்காய விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து,கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது. எனினும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது. ஆயினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் […]
யாழ் இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம்(14) இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த 6 மாத குழந்தையின் உடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. […]
கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் அவரது அலுவலகத்தில் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
மிகிந்தலை பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்றிரவு குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை, கெலே திரப்பனய, இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதுடைய இளம் மனைவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.