27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்க விருக்கும் மாணவர்கள் பற்றிய எச்சரிக்கை

பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த காரணத்தால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்கள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களால் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை காரணமாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் செயல்பாடுகள் இன்மை போன்ற பல நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் நோய்வாய்ப்பட்ட பல சிறுவர்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் மன நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிள்ளைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

டயானா கமகேவை பிணையில் விடுவிக்க மன்றம் உத்தரவு !

User1

தமிழ் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் !

User1

மூவரை பலியெடுத்த லொறி – முச்சக்கர வண்டி விபத்து

sumi

Leave a Comment