உயிருடன் இருக்கும் போதே நீதியை பெற்றுத் தாருங்கள் சமரசத்தை ஏற்கோம்..வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் ஜநா ஆணையாளருக்கு கடிதம்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறமுறையை தவிர எந்த ஒரு சமரசத்தையும் ஏக்கப் போவதில்லை என தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் உயிருடன் இருக்கும்போதே எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரி ஐநா மனித உரிமைகள் ஆணையாளரைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தில் குறித்த வேண்டுகோளை முன் வைத்துள்ளனர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமத்தை ஐ.நா உட்பட, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் ,சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மனிதாபிமானத்தை சொல்லிலும் செயலிலும் கடைப்பிடிக்கும் நாடுகள், மற்றும் மனிதாபிமானத்தை உச்சரித்தபடியே வலிந்து காணாமல் ஆக்கும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகள் என்பனவும் உள்ளடங்கும்.
இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை இவர்கள் அனுஷ்டிப்பதன் மூலம் சாதிக்க நினைப்பது எதனை?
காணாமல் ஆக்குதல் என்பது மனிதநேயத்திற்கு எதிரான செயல், அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைப் புரிய வைக்க, உணர வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த என்று எடுத்துக் கொள்ளலாமா?
அல்லது வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான நாள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படுகின்ற, மிக மோசமானதும், மனித உரிமை மீறலான வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுவதுமான இந்த வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை ஒழிக்க ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஷ்டிப்பது பயனுள்ளதாக அமையும்.
இலங்கையின் வடக்கு கிழக்கிலே வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கின்றது. வேறுவிதமாக் கூறுவதானால் பிரிட்டிஷ் ஆட்சியினரிடமிருந்து சிங்களவர்களின் கைகளுக்கு அதிகாரம், “சுதந்திரம்” என்ற பெயரில் கைமாறியதைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான அடக்குமுறை படிப்படியாக அதிகரித்து .
1958 இல் தெற்கில் தமிழ் இனத்தின் மீதான வன்முறையாக பிரயோகிக்கப்பட்டது.