உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அவுஸ்திரேலிய அணியை மீண்டும் விமர்சித்த கவாஜா!

விளையாட்டுச் செய்திகள் 5 நிமிடங்கள் முன்
45 பார்வைகள்

கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவை முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மீண்டும் விமர்சித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் மணல் காகிதத்தைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது கேமராவில் பதிவானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய அணி தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணை அணி தலைவர் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, 2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், பந்தின் தன்மையை மாற்ற வெளிப்பொருள் பயன்படுத்தப்பட்டது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்று பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கையை கவாஜா விமர்சித்திருந்தார். அவரது குற்றச்சாட்டுகளை கம்மின்ஸ், “முற்றிலும் முட்டாள்தனமானவை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘தி கிரேடு கிரிக்கெட்டர்’ பாட்காஸ்டில் பேசிய கவாஜா,

இந்த குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்த சர்ச்சைக்கு ஒட்டுமொத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார். “நான் நிம்மதியாகத தூங்குவேன். நான் உண்மையைத்தான் கூறியுள்ளேன். கேமரூன் பான்கிராப்டும் உண்மையைத் தெரிவித்துள்ளார். சாட் சேயர்ஸும் உண்மையைப் பேசியுள்ளார்” என்று அவர் குறிப்பிட்டார்.

பந்தைச் சேதப்படுத்தும் நடவடிக்கை குறித்து யாருக்கு தெரியும் என்ற விவாதத்தைவிட, அதற்கான பொறுப்பை ஒட்டுமொத்த அணியும் ஏற்றுக்கொள்வதே முக்கியம் என்று கவாஜா வலியுறுத்தினார். பந்துவீச்சாளர்கள் தனியாக அறிக்கை வெளியிட்டது அணியின் மற்ற வீரர்களை இந்தப் பொறுப்பேற்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், ‘எப்படியாவது வெற்றி பெற வேண்டும்’ என்ற மனப்பான்மை 2016 ஆம் ஆண்டு முதலே படிப்படியாக வளர்ந்ததாகவும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடமிருந்து பயிற்சியாளர்கள் வழியாக வீரர்களுக்கு அழுத்தம் சென்றதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பந்து சேதப்படுத்திய சர்ச்சையில் முக்கிய நபராக இருந்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர்,…

26 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை ஏ அணி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

யுவராஜ் சிங்குடனான உரையாடலே தனது இரட்டைச் சதத்தின் இரகசியம்

தனது கிரிக்கெட் முன்மாதிரியான முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் மேற்கொண்ட 30 நிமிட தொலைபேசி உரையாடலே சாதனை இரட்டைச் சதம் அடிக்க முக்கியக் காரணமாக அமைந்ததாக…

41 0 0
விளையாட்டுச் செய்திகள்

சூர்யவன்ஷியின் வயதில் சந்தேகம் – மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வலியுறுத்தல்!

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்…

39 0 0