உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் வீழ்ச்சி!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
128 பார்வைகள்

இலங்கை நாடாளுமன்றத்தின் சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக, பெருமளவிலான ஊழியர்கள் நேற்று(19) மற்றும் நேற்று முன்தினம்(18) மதிய உணவை உட்கொள்ளாமல் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் தீவொன்றில் அமைந்துள்ளதால், ஊழியர்களுக்கு வேறு இடங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், பாதுகாப்புக் காரணங்களால் வீடுகளிலிருந்து உணவைக் கொண்டுவருவதற்கும் அனுமதி இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் இல்லப் பராமரிப்புத் திணைக்கள அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, நிதி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைக் குறிப்பிட்டளவு கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பிரதானமாக சாதாரண ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையின் உணவு மற்றும் பானங்கள் தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

134 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

125 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

122 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

132 0 0