உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிராமப்புற மக்களின் அடிப்படை உட்கட்டமைப்புத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
134 பார்வைகள்

அபிவிருத்திப் பணிகள் வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படக்கூடாது. மாறாக, மக்களின் உண்மையான தேவைகளையும், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டே அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது, அதிகளவான வாக்குகளைப் பெற்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலை காணப்படுகின்றது. இதனால் குறைந்தளவு வாக்குகளைக் கொண்ட கிராமப்புறங்கள் மற்றும் எல்லைக் கிராமங்கள் பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இன்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், வடிகாலமைப்பு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, எந்தவொரு கிராமத்தையும் வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு புறக்கணிக்க முடியாது. மக்களின் தேவைகளையும், அப்பகுதிகளின் அபிவிருத்தி முன்னுரிமைகளையும் கருத்திற்கொண்டு நிதி ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கிராமங்களுக்கும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0