உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறையில் போ@தைப்பொருளுடன் இருவர் கைது!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
113 பார்வைகள்

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் பொலிஸார் இன்று மாலை முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, 8 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு இவ்விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கைது நடவடிக்கையின் போது முதலாவது சந்தேகநபரான  விளினியடி – 08 பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 6 கிராம் 074 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.மற்றைய இரண்டாவது சந்தேகநபரான  செந்நெல் கிராமம் – 02 பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து 2 கிராம் 158 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அவர்களின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சி அவர்களின் வழிநடத்தலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் ஆலோசனையின் கீழ், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்தமை குறித்தும், இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களா அல்லது தனிப்பட்ட பாவனைக்காக வைத்திருந்தார்களா என்பது தொடர்பிலும் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

147 0 0